அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்: திருக்கல்யாணம்

அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்: திருக்கல்யாணம்
X
அவனியாபுரம் பாண்டிய மன்னர் காலத்திய பாலமீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வர் திருக்கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் கி.பி. 6ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர் காலத்திய பாலாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவை போல் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பத்து நாள் சித்திரை திருவிழா நடைபெறும் .

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பாலா மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை ஒட்டி கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . இன்று மாலை பால மீனாம்பிகை - சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பூப்பல்லாக்கு நிகழ்ச்சி நடைபெறும்.

Tags

Next Story