மதுரை அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி

மதுரை அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுக்கா உட்பட்ட விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் காதர் உசைன் மகன் ரசூல்தீன்(40). ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு , திருமணமாகி சுல்தானா என்கிற மனைவியும், பிலால் என்கிற மகனும் கோரி பீவி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், ரசூழ்தீன் நேற்று காலை வீட்டின் மாடியில் துண்டை எடுக்க சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அருகில் சாய்த்து வைத்திருந்த கம்பி மேலே இருந்த மின்கம்பியில் உரசிரசூழ்தீன் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்தது. அலறி சாய்ந்து விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது குடும்பத்தினர் மதுரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, திருப்பரங்குன்றம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!