சோழவந்தான் பகுதியில் விஜய தசமி: அம்பு எய்தல் நிகழ்ச்சி!

சோழவந்தான் பகுதியில் விஜய தசமி: அம்பு எய்தல் நிகழ்ச்சி!
X

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் விஜய தசமியை முன்னிட்டு அம்பு எய்தல் நடைபெற்றது.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் விஜய தசமியை முன்னிட்டு அம்பு எய்தல் நடைபெற்றது.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் விஜயதசமி விழாவை முன்னிட்டு அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் நடந்தது. அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.இதில் கோவில் செயல் அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதே போல் திரௌபதி அம்மன் கோவிலில் அம்மன் புறப்பட்டு வைகை ஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவஹர்லால்,குப்புசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் சுவாமி வைகை ஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் நடந்தது. இதில் செயல் அலுவலர் சுதா, பார்த்தசாரதி பட்டர், கோவில் பணியாளர் முரளிதரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில், நடந்தஅம்பு எய்தல் விழாவில் செயல் அலுவலர் கார்த்தியைசெல்வி, ஆலய பணியாளர்கள் நாகராஜன், மணி , திவ்யா,ஜெகநாதன் உள்படஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் நடந்த விஜயதசமிவிழாவில் சுவாமி கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து வழி நெடுக திருக்கன் உள்ள இடங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனை தொடர்ந்து அருகில் உள்ள தச்சம்பத்தில் உள்ள மண்டகப்படிக்கு பகலில் வந்து சேர்ந்தது. இங்கே சுவாமி குதிரை வாகனத்தில் அலங்காரமாகி பூஜைகள் நடந்தது. பரசுராமபட்டர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து இங்கு உள்ள நந்தவனத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. பரம்பரை அறங்காவலர்சேவுகன் செட்டியார், செயல் அலுவலர் சரவணன் கோவில் பணியாளர் பழனிகுமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலக்கால் வெங்கடேச பெருமாள் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா வந்தார் இதில் ஆங்காங்கே பக்தர்கள் பொதுமக்கள் தேங்காய் உடைத்து பெருமாளை தரிசித்து வழிபட்டனர் அன்னதானம் வழங்கப்பட்டது சோழவந்தான், காடுபட்டி காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்.

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!