மறைந்த ராணுவ மேஜருக்கு சொந்த ஊரில் இறுதி மரியாதை

மறைந்த ராணுவ மேஜருக்கு சொந்த ஊரில் இறுதி மரியாதை
X

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜரின் உடலுக்கு  மரியாதை செய்த மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்.

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ராணுவ மேஜர் ஜெயந்தின் உடல் அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது

மதுரையில் மறைந்த ராணுவ மேஜர் உடல் அடக்கத்தின் போது துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவத்தினர் மரியாதை செய்தனர்.

அருணாச்சல பிரதேசத்தில், திராங் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெமங்கலத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த் பலியானார். அவரது உடல், பெரியகுளம் செல்வதற்காக மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது, உடலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன் சித்சிங், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் மதுரை வடக்கு மண்டல துணை ஆணையர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர் சொந்த ஊரில் நடைபெற்ற மேஜர் ஜெயந்தின் உடவ் அடக்கம் செய்யும் நிகழ்வில் ராணுவத்தின் துப்பாக்கி குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தினர்.

அருணாச்சலப் பிரதேசம் மேற்கு கமெங் மாவட்டத்திலிருந்து நேற்று முன்தினம் சிட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று சாங் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. இதில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினட் அதிகாரி இருவரும் விமானிகள் ஆக ஹெலிகாப்டரை இயக்கி சென்றுள்ளனர். மேலும் அன்று காலை 9 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் 9.15 மணிக்கு கட்டுப்பாட்டு மையத்துடன் உண்டான தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு இழந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அருணாச்சல பிரதேசம் மேற்கு பூம்டிலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் இதன்பின் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் உடல் கருகி இறந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

மேலும் விபத்தில் பலியான இரண்டு ராணுவ அதிகாரிகள் லெப்டினன்ட் வி வி பி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆவர். தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் பிள்ளை மல்லிகா தம்பதியினரின் மகன் ஜெயந்த் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவரது உடல் இன்று ராணுவ விமானத்தின் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தேனி மாவட்டம், பெரியகுளம், ஜெயமங்கலத்தில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ன.

தமிழக அரசு சார்பாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, மேஜர் ஜெயந்த் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து தமிழக அரசு அறிவித்த ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர், பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் கீதா, பாஜக பி சி பாண்டியன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராணுவ அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
highest paying ai jobs