மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஆண்டு விழா!
மாநகராட்சி பள்ளி ஆண்டு விழா:
மதுரை:
மதுரை மாநகராட்சி கல்வி ஒன்றே வாழ்வில் சிறந்த நிலைய அடைய செய்யும் மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள் மாணவ, மாணவிகளிடம் பேசினார்.
மதுரை மாநகராட்சி திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளி. கஸ்தூரிபாய் காந்தி மேல்நிலைப்பள்ளி, மற்றும் பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆண்டுவிழா மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் இன்று (09.02.2024) நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.56 சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப்பள்ளி, மண்டலம் 2 வார்டு எண்.22 தத்தனேரி திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மண்டலம் 3 வார்டு எண்.50 கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மண்டலம் 2 வார்டு எண்.15 பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் ஆண்டுவிழா மேயர் தலைமையேற்று துவக்கி வைத்து தமிழக பள்ளிக்
கல்வித்துறை நடத்திய கலைத் திருவிழா, மாநில மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டி, பேச்சுப்போட்டி , கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் 2022-23 ஆம் ஆண்டு 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு மாணவர்கள் வருகையை ஊக்கப்படுத்தும் வகையில் 100 சதவீகிதம் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவிகள் என ,சுமார் 455 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை , மேயர் வழங்கி பாராட்டினார்கள்.
அனைத்து பள்ளிகளில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு , மேயர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். பள்ளி ஆண்டு விழாவில், திரு.வி.க.மாநகராட்சி பள்ளி 110 மாணவர்களுக்கும், 19 மாணவிகளுக்கும், பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி பள்ளி 70 மாணவர்களுக்கும், 12 மாணவிகளுக்கும் என, மொத்தம் 211 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை, மேயர் வழங்கினார்கள்.
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்ற ஆண்டு விழாவில், மேயர் தலைமையேற்று பரிசுகளை வழங்கினார். மேலும், தமிழக அரசின் சார்பில் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப் பட்டு வருகிறது. இதனை மாணவஇ மாணவிகள் நல்லமுறையில் பயன்படுத்தி கல்வியை சிறந்த முறையில் கற்க வேண்டும் கல்வி ஒன்றே வாழ்வில் சிறந்த நிலையை அடைய செய்யும் என , மேயர் பேசினார்.
இந்நிகழ்வில் ,மண்டலத் தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் மகாலெட்சுமி , ஜென்னியம்மாள், இந்திராகாந்தி , பள்ளி தலைமை ஆசிரியர்கள் மரியசெல்வநாதன், முருகேஸ்வரி நாகரத்தினம், வீரணன், உதவி தலைமை ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu