வாடிப்பட்டியில் அண்ணா சிலைக்கு எம்.எல்.ஏ. மாலை அணிவிப்பு

வாடிப்பட்டியில் அண்ணா சிலைக்கு வெங்கடேசன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர்மாலை.அணிவித்து மரியாதை செய்தனர் .
பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளையொட்டி வாடிப்பட்டியில் உள்ள அண்ணாசிலைக்கு மதுரை வடக்கு.மாவட்ட திமுக சார்பாக வெங்கடேசன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி தி.மு.க.சார்பாக மாவட்டத்துணைச் செயலாளர் வெங்கடேசன் எம்எல்ஏ தலைமை வகித்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
பேரூர் செயலாளகள் மு.பால்பாண்டியன், வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஒன்றிய செயலாளர்கள் பாலராஜேந்திரன், பசும்பொன் மாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, ஸ்ரீதர் சி.பி.ஆர்.சரவணன் வழக்கறிஞர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் புதூர் சேகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அயுப்கான், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத்தலைவர்கள் வழக்கறிஞர் கார்த்தி, லதா கண்ணன், சோழவந்தான் பேரூர்துணை செயலாளர் ஸ்டாலின், ஒன்றிய கவுன்சிலர்கள் தனபால், மேலக்கால் சுப்பிரமணி, மன்னாடிமங்கலம் ரேகா வீரபாண்டி, முள்ளிபள்ளம் கார்த்திகா ஞானசேகரன், ம முள்ளிபள்ளம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, பேரூராட்சி பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின், கவுன்சிலர்கள் முத்து செல்வி சதீஷ், செல்வராணி குருசாமி, சிவா,உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞரணி செயலாளர் ஜி.பி.பிரபு நன்றி கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu