திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆனி திருமஞ்சன உற்சவம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆனி  திருமஞ்சன உற்சவம்
X

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளிய காட்சி

முருகன் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழா, காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

இவ்விழாவையொட்டி, கோயிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் விஷேச ஊஞ்சல் அமைக்கப்பட்டு அதில், தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.தொடர்ந்து, வருகின்ற 12 ஆம் தேதி வரை தினமும் சுவாமி ஊஞ்சலில் தெய்வானையுடன் எழுந்தருளி அருள்பாலிப்பார். விழாவின் 10 ஆம் நாளான 13 ஆம் தேதி பகல் 12 மணியளவில் உச்சிகால வேளையில் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி, சத்திய கீரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள்,துர்க்கை, கற்பக விநாயகர் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் மா, பலா, வாழை ஆகிய முப்பழங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.இவ்விழா ஏற்பாடுகளை, கோயில்துணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்