சோழவந்தானில் அமமுகவினர் குக்கர் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

சோழவந்தானில் அமமுகவினர் குக்கர் சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை சோழவந்தானில்,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

சோழவந்தானில், அமமுகவினர் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி தீவிர பிரசாரம் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆங்காங்கே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை புறநகர் வடக்கு மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரங்கள், களைகட்டி வருகின்றன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிடும் வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவாக, ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமையில், நகரச் செயலாளர் வழக்கறிஞர் சத்யபிரகாஷ் முன்னிலையில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஐந்து வார்டுகளில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய வீதிகளில், குக்கர் சின்னம் பொருந்திய பதாகைகளை ஏந்தியும், கொடிகளை பிடித்தும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

Tags

Next Story