சோழவந்தான் அருகே திருவேடகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம்

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் முன்னாள் மாணவர்கள் சங்கக் கூட்டம்
X

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க கூட்டம்.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம்

சோழவந்தான் திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்க கூட்டம் நடைபெற்றது.

திருவேடகம் கல்லூரி வளாகத்தில் அம்பிகா கட்டிடத்தின் தரைதளத்தில் முன்னாள் மாணவர் சங்கத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.

விவேகானந்த கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை. சங்கத்தின் துணைத்தலைவர் சத்தியநாராயணன் வரவேற்றார்.கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த ஆசியுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் கடந்த ஆண்டுகளில், கல்லூரியின் சாதனைகள் மற்றும் நடைபெற்ற சிறப்பான நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். துணை முதல்வர் முனைவர் பார்த்தசாரதி வாழ்த்துரை வழங்கினார். சங்கத்தின் கௌரவர் தலைவரும், கல்லூரியின் முன்னாள் முதல்வரும் ஆகிய முனைவர் ராஜா சிறப்புரை ஆற்றினார். சங்கத்தின் தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமை உரை ஆற்றினார்.

சங்கத்தின் பொருளாளர் முனைவர் பட்டினத்தார் ஆண்டு வரவு செலவு கணக்கை வாசித்தார்.சங்கத்தின் செயலர் சங்கர் சங்க நடவடிக்கைகள் பற்றி பேசினார்.நிகழ்வில், கலந்து கொண்ட கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மேலும், இந்த கல்வி ஆண்டில் ஒவ்வொரு துறையிலும் கல்வியில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களை ஊக்கம் செய்யும் விதமாக புத்தக பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் துறை சார்ந்த பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் பேசினர். நிகழ்ச்சியில் பங்குபெற்ற முன்னாள் மாணவர்கள் சங்க நடவடிக்கைகள் பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வடிவேல் ராஜா நன்றியுரை வழங்கினார்.மதிய இடைவேளைக்கு பின் முன்னாள் மாணவர்கள் அவரவர் துறை சார்ந்த மாணவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!