தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி தெரியும் : மதுரையில் சசிகலா பேட்டி

மதுரையில் ,வி .கே. சசிகலா அளித்த பேட்டி.
Alliance Confirm After Election Announcement
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61 வது குருபூஜை மற்றும் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வி.கே.சசிகலா மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
*இரண்டு ஆண்டுகளாக பசும்பொனுக்கு வராத இபிஎஸ் தற்போது தேர்தல் நாள் வருகிறார் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குஇவிருப்பப்பட்டவர்கள் வருவதில் எந்தத் தவறும் இல்லை.
*பாஜக கூட்டணியில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு,தேர்தல் சமயத்தில் தான் எந்த கட்சியுடன் இருக்கிறார்கள் என்று தெரியும்.
*ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பாஜக நாடகமா என்ற கேள்விக்கு,எனக்கு அப்படி தெரியவில்லை. அதுதான் முகப்பு வாயில் அந்த இடத்தில் காவலர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள். அந்த சமயத்தில் ஒருவர் வாயில் அருகில் வரும் அளவிற்கு காவலர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அவரை முன்கூட்டியே பிடித்திருந்தாலும் மறைக்காமல் தெரிவித்து இருக்கலாம்.
*இபிஎஸ் பிரதமர் ஆவார் என்று ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு,மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது. நீங்களும் நானும் தனிமனிதராக எதுவும் சொல்ல முடியாது. அவர்களின் ஆசையை அவர்கள் சொல்வதாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
*2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்த கேள்விக்கு,வியூகம் உள்ளது. எங்க கட்சிக்குள் நாங்கள் ஒரு குடும்பத்தைப் போல தான் அவர் (ஓபிஎஸ்) விருந்தாளி இல்லை இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
*இலங்கை மீனவர்கள் கைது குறித்த கேள்விக்கு,திமுக ஆட்சியில் தான் கச்சத்தீவை கொடுத்தார்கள். அது மீனவர்களுக்கு நல்ல விஷயமா. மீனவர்கள் எப்படி போனால் என்ன என்கிற நினைப்பில் தான் அன்றைக்கே அவர்கள் செய்திருக்க வேண்டும் அதனால் அவர்களிடம் இன்று மீனவர்களுக்கு உதவியை எதிர்பார்ப்பது தவறு என்று நான் நினைக்கிறேன்.
*அம்மா திட்டங்களை நாங்கள் நிறைவேற்றவில்லை திமுக வகுத்த திட்டங்களை தான் நிறைவேற்றுகிறோம் என்று உதயநிதி கூறியது குறித்த கேள்விக்கு?மக்களுக்கு தெரியும் யார் ஆட்சியில் என்ன செய்தார்கள் மக்களுக்கு அது சென்று சேர்ந்ததா என்று மக்கள் அறிவார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் ஆகிவிட்டது அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை மக்களிடம் கேட்டால் அவர்கள் பதில் சொல்வார்கள். எனக்குத் தெரிந்து அவர்கள் சொன்னதை எதுவும் உருப்படியாக செய்யவில்லை என்பதுதான் என் குற்றச்சாட்டு.
*தேர்தலுக்கு முன்பு அனைவரையும் ஒன்றிணைப்பீர்களா, இபிஎஸ் இடம் இருப்பது தான் அதிமுக என தேர்தல் ஆணையமும் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு,சிவில் வழக்கு தீர்ப்பு இன்னும் வரவில்லை. அந்தத் தீர்ப்பு வந்தால் தான் இறுதி முடிவு என்று அவர்களும் சொல்லியுள்ளார்கள் தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் அந்த கடிதத்தை தான் கொடுத்திருக்கிறார்கள்.
*நீங்கள் பொதுச் செயலாளர், ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளரா என்ற கேள்விக்கு,அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட போது என்ன நிலைமை இருந்ததோ அதுதான் அதிமுக நிலைமை. தொண்டர்களை தொடர்ந்து சந்தித்து தான் வருகிறேன் தேர்தலும் வருகிறது விரைவில் சுற்றுப்பயணம் ஆரம்பிப்பேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu