அகில இந்திய ஜூனியர் கேரம் போட்டி: தமிழக அணி சாம்பியன்ஷிப்

அகில இந்திய ஜூனியர் கேரம் போட்டி: தமிழக அணி சாம்பியன்ஷிப்
X

கேரம் போட்டியில்  சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற தமிழக அணி

அகில இந்திய ஜூனியர் கேரம் போட்டியில் தமிழ்நாடு அணி இரு பிரிவிலும் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது

மாவட்டம், சிந்தாமணி பகுதி பொட்டப்பாளையத்தில் அமைந்துள்ள எஸ். ஆர். எம். பொறியியல் கல்லூரியில், மதுரை மாவட்ட கேரம், தமிழ்நாடு கேரம் சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் .மதுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து அகில இந்திய கேரம் சம்மேளனம்' நடத்திய 48வது தேசிய அளவிலான ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மூன்று நாட்களாக நடைபெற்றது.

தமிழ்நாடு, தெலுங்கானா உட்பட 25 மாநிலங்களிருந்து 300க்கும்மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் ,18 வயதிற்குட்பட்ட சிறுவர் குழுபோட்டியில் தமிழ்நாடு அணி மகாராஷ்டிரா அணியை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறுமிபருக்கான குழுபோட்டியில் தமிழ்நாடு அணி தெலுங்கானா அணியை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றது.

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ்நாடு அணி இருபிரிவுகளிலும் தங்க பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளது. இப்பரிசளிப்பு விழாவில், ஆல் இந்திய கேரம் பெடரேஷன் அசோசியேட்டின் துணைத் தலைவர் நாசர்கான் மற்றும் மதுரை மாவட்ட கேரம் அசோசியேசன் தலைவர் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலும் பொதுச் செயலாளர் பாரதியநாராயண் அர்ஜுனாஅவார்ட் மரியஇதயம் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு விளையாட்டுத்துறை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுந்தர் எம்.ஆர். கல்வி குழுமத்தின் தாளாளர் ரகுநாதன், எஸ். ஆர். எம் கல்லூரியின் முதல்வர் துரைராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பைகளை வழங்கினார்கள்.

இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை, தமிழ்நாடு கேரம் அசோசியேஷன் பொருளாளர் கார்த்திகேயன் செய்திருந்தார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி