தமிழகத்தில் மதுபானங்கள் ஆறாக ஓடுகிறது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில்  மதுபானங்கள் ஆறாக ஓடுகிறது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
X

செல்லூர் ராஜு(பைல் படம்)

மதுரைக்கு, தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி, சாலைகள், வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

மதுரையில், பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மதுவானது ஆறாக ஓடுகிறது. தமிழக முதல்வர், சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கள்ளச்சாராய இறப்பு என்பதை, அரசு முன் கூட்டியே தடுத்திருக்க வேண்டும்.மதுரையில், சித்திரைத் திருவிழாவில், இறந்தவர்களின் குடும்பத்துக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.ஜல்லிக்கட்டு தீர்ப்பால், தமிழகத்தில் கலாசாரம் காக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மதுரைக்கு, தமிழக அரசு அதிக நிதி ஒதுக்கி, சாலைகள், வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும். மதுரையில், அதிமுக மாநாடு, மகாமகம் திருவிழா போல நடைபெறும் என்றார்.முன்னதாக, மதுரை மேற்கு தொகுதி, சோலையழகுபுரம், ஜானகி நகர் 1-வது தெருவில், பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை, செல்லூர் கே. ராஜூ தொடங்கி வைத்தார்.

Tags

Next Story
ai in future agriculture