அலங்காநல்லூர் தென்னிந்திய அளவிலான கபடி போட்டி

அலங்காநல்லூர்  தென்னிந்திய அளவிலான   கபடி போட்டி
X

அலங்காநல்லூர் அருகே நடைபெற்ற  தென்னிந்திய அளவிலான மாபெரும் கபாடி போட்டி

தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டியை அலங்காநல்லூர் ஒன்றியம் அதிமுக செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்

அலங்காநல்லூர் அருகே தென்னிந்திய அளவிலான மாபெரும் கபாடி போட்டி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே சின்ன ஊர் சேரி கிராமத்தார்கள் ஒத்தவீடு அனைத்து ஊர் நண்பர்கள் சார்பாகவும், எஸ் .கே. சதீஷ் குமார் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டியை, அலங்காநல்லூர் ஒன்றியம் அதிமுக செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

ஊர் சேரி ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார், அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், கவுன்சிலர் கலையரசன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில், வழக்கறிஞர் ராஜ்குமார், ராஜ பிரபு,எம். எஸ். சுந்தரம், கண்ணன் தெய்வம் பாண்டி,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின், சுபாஷ், மதுரைவீரன் ஆகியோர் கலந்து கொண்டு கபடி போட்டியை தொடங்கி வைத்தனர்.

Tags

Next Story
ai powered agriculture