ஐப்பசி பௌர்ணமி நாள் : மதுரை கோயில்களில், சிவனுக்கு அன்னாபிஷேகம்!

ஐப்பசி பௌர்ணமி நாள் : மதுரை கோயில்களில், சிவனுக்கு அன்னாபிஷேகம்!
X
ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு மதுரை கோயில்களில், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை கோயில்களில்,அக். 28-ல் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்:

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில், அக்டோபர் 28-ஆம் தேதி சனிக்கிழமை ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு, அண்ணா அபிஷேகம் நடைபெறும். ஆண்டுதோறும் ஐப்பசி பௌர்ணமி அன்று, கோயில்களில் சிவபெருமானுக்கு பக்தர்கள் அண்ணாபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேச திருக்கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர், இம்மையில் நன்மை தருவார் ,பழைய சொக்கநாதர் ,மதுரை அருகே சோழவந்தானில் விசாக நட்சத்திரமாக விளங்கும் சிவன் ஆலயம், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், தென்கரை மூலநாத சுவாமி ஆலயம்,

அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம்,

சௌபாக்கிய விநாயகர் ஆலயம், அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் சிவபெருமானுக்கு , பால் , இளநீர் போன்ற அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு , அதைத் தொடர்ந்து அண்ணாபிஷேகம் நடைபெறும் .

இதை அடுத்து பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாத வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக மகளிர் குழுவினர் செய்து வருகின்றனர்.

ஒருகாலத்தில் தில்லையில் அன்னதானம் சிறப்புற்றுத் திகழ்ந்தது. அப்பர் காலத்திலும் அன்னதானம் சிறப்புற நடைபெற்றது என்பதை மேற்காணும் பதிகத்தின் மூலம் அறியலாம்.

தில்லைச் சிதம்பரம் கோயிலில் முன்பு தினமும் இறைவனுக்கு அன்னாபி ஷேகம் நடைபெற்றது என்பர். ஆதிசங்கரர் தரிசிக்க வந்தபோது, இந்தக் கோயிலில் `அன்ன ஆகர்ஷண யந்திரம்' ஒன்றை நிறுவியதாகக் கூறுவார்கள். அதனால் தில்லை பெருமானை தரிசித்தாலோ, மேற்காணும் பதிகத்தைப் பாடி வழிபட்டாலோ, வீட்டில் அன்னம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

அன்னமய கோசமான இந்த தேகத்துக்கு ஆதாரமாய் இருப்பது அன்னம். மண்ணில் சேறோடு முளைத்து, காய்ந்து, பத்தர் - உமி போன்ற குற்றங்கள் நீங்கி, நீரில் ஊறி மேலும் தூய்மையாகி, நெருப்பில் வெந்து - ஆவியில் பக்குவமாகி, கொதிக்கும் சத்தங்கள் அடங்கி - பளிச்சென்ற வெண்மை நிறம் தாங்கி, புத்துணர்வு தரும் வாசனையோடு புதுப்பிறவி எடுக்கும் அன்னம் ஈசனை அடை யும் தகுதியைப் பெறுகிறது. இது, நல்ல அடியார்களுக்கு உவமையாக சைவத்தில் கூறப்படும்.

ஒவ்வொரு சோற்றுப் பருக்கையும் லிங்க வடிவானது; அன்னம் ஈசனின் அம்சமாகிறது. ஒப்பற்ற இந்த அன்னத்தை ஈசனுக்குப் படைக் கும் விழா ஐப்பசி அன்னாபிஷேகம்.

சோத்துக்குள்ளே இருக்கிறான் சொக்க நாதன்... சோறு கண்ட இடம் சொர்க்கம்... சோறும் ஈசன்; நீரும் ஈசன்... போன்ற பழமொழி கள் எல்லாம் தத்துவத்தின் அடிப்படையில் உருவானவையே எனலாம்.

இந்த மாதத்தில் இந்த விழா கொண்டாடப் பட்டதன் காரணத்தை வேறுவிதமான கோணத்திலும் பெரியோர்கள் விளக்குவார்கள்.

ஐப்பசி மாதம் அடைமழை காலம். திடுமென வெள்ளம் சூழ்ந்து மக்கள் தவிக்கும் நிலையும் உருவாகும். அப்போதெல்லாம் ஊரில் இருக்கும் சிவாலயத்தில்தான் தஞ்சம் புகுவார்கள்.

அங்கே ஊர் மொத்தத்துக்குமான உணவு ஒரே இடத்தில் சமைக்கப்பட்டு விநியோகிக்கப் படும். அந்த நிலையிலும் படியளக்கும் பரமனுக்கு உணவைப் படைத்து வழிபட்டு, சாதத்தைப் பிரசாதமாகப் பெற்று உண்டனர் நம் முன்னோர்.

அபிஷேக அன்னம் மீதம் இருப்பின் அதை வீணாக்காது நீரில் கரைத்து விடுவார்கள். இதனால் நீர் வாழ் உயிரினங்களும் அந்த மழைக் காலத்தில் உணவு பெற்று மகிழும்; இயற்கைச் சூழல் சங்கிலி வளப்படும்.

அபிஷேகப் பிரியரான ஈசனுக்கு 70 விதமான மங்கலப் பொருள்களால் அபிஷேகம் செய்யலாம் என்கின்றன ஆகமங்கள். அவற்றில் சிவரூபமான அன்னத்தால் அபிஷேகித்தால் உணவுப் பஞ்சமே ஏற்படாது; உணவால் வரும் நோய்கள், குற்றங்கள் எதுவும் அணுகாது, அன்ன தோஷம் போன்றவை விலகும் என்கின்றன ஞானநூல்கள்.

பஞ்ச பூதங்களின் தலைவனான ஈசன், பஞ்ச பூதங்களால் பக்குவப்படுத்தப்பட்ட அன்னத்தால் அபிஷேகம் செய்விக்கப் படும்போது மகிழ்கிறான் எனக் கூறுகின்றன ஆன்மிக நூல்கள்.

பசிப்பிணியை அகற்றும் மகத்தான சேவை அன்னதானம். அதை ஆண்டவன் பெயரில் செய்யும் தலையாய விழா இந்த ஐப்பசி அன்னாபிஷேகம். `கொடுத்து உண்' என்ற உயரிய நோக்கத்தைக் கொண்ட இந்த விழா, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம்மால் கொண்டாடப்படுகிறது என்பதை திருமுறைகள் கூறுகின்றன.

ஐப்பசி மாதத்தில் அசுவினி நட்சத்திரத்துக்குரிய அன்னத்தால் ஈசனை அபிஷேகம் செய்தால், செய்தவர் குடும்பம் சகல நன்மை களும் அடையும் என்கின்றன ஜோதிட நூல்கள். அன்ன சூக்தத் தில் `ஈசனே அன்னத்தின் வடிவில் உறைகிறார் என்றும், அன்னத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பவர் தலைமுறை என்றுமே குறையில்லாது வாழும்' என்றும் கூறுகிறது.

முழுக் கலையையும் கொண்ட சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து ஆற்றல் மிக்க தன் ஒளியைப் பொழியும் நாள் ஐப்பசி பெளர்ணமி. இதனால், நம் மனோசக்தி பன்மடங்கு பெருகும்; நினைவாற்றல் மேம்படும். அற்புதமான இந்த நாளை விழாவாக்கி, அன்று மக்கள் பரமனை வழிபட்டுப் பயனடையும் விதம் நம் முன்னோர் கொண்டாடியது வியப்பான விஷயம்.

அன்னாபிஷேகத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது, எந்த அபிஷேகம் என்றாலும் அந்த அபிஷேகக் கோலத்தில் ஸ்வாமியின் தரிசனம் 24 நிமிடங்கள் (1 நாழிகை) மட்டுமே இருக்கவேண்டும் என்பது ஆகம விதி.

சிற்சில இடங்களில் 48 நிமிடங்கள் ஆகலாம். ஆனால் அதற்கு மேல் அபிஷேகக் கோலம் நீடித்திருக்கக் கூடாது என்பது விதி. ஆனால், அன்னாபிஷேகக் கோலம் மட்டும் ஒன்றரை மணி நேரம் வரை கூட அப்படியே இருக்கலாம் என்பது விசேஷம்.

வெகுநேரம் ஈசனின் திருமேனியில் தங்கியிருந்த அன்னம் சிறப்பானப் பிரசாதமாக மாறுகிறது. இதனால், இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய்கள் விலகும், தேகம் பொலிவு பெறும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நிவாரணம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!