ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரை சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரை சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு
X

சமூக இடைவெளியுடன் பூக்களை வாங்கும் மக்கள்.

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு பூக்கள் வழக்கத்தை விட உயர்ந்து காணப்பட்டது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மலர் சந்தையில் ஆடி18 முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு கிலோ 80 ரூபாய் 100 ரூபாய்க்கு விற்ற மல்லிகைப்பூ இன்று 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ரோஜா சம்பங்கி முல்லை பூ கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கொரோனா தொடர் அச்சுறுத்தல் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின்படி வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே மலர் சந்தையில் அனுமதி வழங்கினர். கடைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியுடன் சனிடேஷன் கொடுத்த பின்பே விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil