அதிமுக நிச்சயமாக ஒன்றிணையும் வெற்றி வாகை சூடும்: மதுரையில் சசிகலா பேட்டி

அதிமுக நிச்சயமாக ஒன்றிணையும் வெற்றி வாகை சூடும்: மதுரையில் சசிகலா பேட்டி
X

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய சசிகலா

அதிமுக தற்போது இரண்டு. மூன்றாக பிரிந்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்விக்கு இவபதிலளித்தார்

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கிய குறைந்த காலத்திலயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சுயேட்சை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தகாரர் அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்று கொண்டிருக்கிறேன். அதிமுக தற்போது இரண்டு. மூன்றாக பிரிந்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்ற கேள்விக்கு, பிரிந்துள்ள அதிமுக நிச்சயமாக ஒன்றிணையும், அதிமுக வெற்றி வாகை சூடும், அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம் என்றார்.

Tags

Next Story
ai healthcare products