நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறும்:அதிமுக எம்பி நம்பிக்கை
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக தேனி எம்பி ப. ரவீந்திரநாத்குமார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அக்கட்சியின் எம்பி ரவீந்திரநாத்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: நடைபெறவுள்ள நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும்.
மதுரையில் இருந்து தேனி செல்லக்கூடிய ரயில்வே பாதை பணிகள் முடிவடைந்து விட்டது. வருகிற 31-ஆம் தேதி அதிவிரைவு ரயில் இயக்க சோதனை ஓட்டம் நடைபெறும். தேனி - போடி வரையிலான ரயிலை இயக்குவதற்கான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது..இதுகுறித்து ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். விரைவில் பணி தொடங்கும். தமிழக மீனவர்கள் படகை இலங்கை அரசு ஏலம் விடும் முடிவு தொடர்பாக,ஏற்கெனவே அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் படகை இலங்கை அரசு ஏலம் விடுவது கண்டனத்துக்குரியது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் இதற்கு முன் நடந்த சட்டமன்ற தேர்தலில், தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை அதிமுக நிர்வாகிகள் புரிந்து வைத்துள்ளனர். எனவே , இந்தத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தலைமை முடிவு செய்யும் என ப. ரவிந்திரநாத்குமார் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu