அமைச்சர் செந்தில் பாலாஜியை பற்றி அமலாக்கத்துறை சொல்லவேண்டியதில்லை மக்களுக்கு தெரியும்
வே. ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.
செந்தில் பாலாஜி பற்றி அமலாக்கத் துறையோ, அரசோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை மக்களே தெரிந்து கொண்டுள்ளனர் என்றார் அதிமுக எம்எல்அ ராஜன் செல்லப்பா பேட்டி:
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று முடித்துவிட்டு, சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.உலக மக்களை கவரும் வகையில் எழுச்சிமிகு மாநாடாக அமையும்.காவல்துறை சார்பில் மாநாடு அனுமதியும் காலம் தாழ்த்தினர் மாநாடுக்கு போதுமான பாதுகாப்பு பணி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு...பாதுகாப்பு கொடுப்பார்கள் என, எதிர்பார்க் கிறோம் கொடுக்கவில்லை என்றாலும் நீதித்துறையை நாடுவோம்.தற்போது, நீதித்துறை சரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை நீதிமன்றத்தை நாடுவதற்கு அவசியம் இருக்காது என நம்புகிறோம்.
20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்பதால், போக்குவரத்து சீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இந்த மாநாடு நடத்தப்படும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம்., வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் வழங்கியது குறித்த கேள்விக்கு...வெடி விபத்து மட்டுமல்ல யானை மிதித்து உயிரிழப்பு நீரில் மூழ்கி பலி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது
நேற்று கூட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற, பேரிடர் பேரிடர் மேலாண்மை துறையில் சரியாக நிர்வாகம் செய்யாததால் ஒழுங்கான அறிவிப்புகள் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்காததால் இது போன்ற நிகழ்வுகள் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகிறது.முறையான பாதுகாப்பு இல்லாததால் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டிய காவல் துறையினர் முறையாக நிர்வகிக்காததால், பட்டாசு விபத்துகள் தமிழகத்தில் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.
இது போன்ற உயிரிழப்புகளுக்கு கூடுதல் பணம் கொடுப்பதற்கு இந்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கள்ளச் சாராய உயிரிழப்புக்கு 10 லட்சம் கொடுத்து முதல்வர் தனது தவறை மறைப்பதற்காகத்தான். முறையாக நியாயமான பணத்தை கொடுக்க வேண்டிய கட்டாயம் அரசிற்கு உள்ளது. பேரிடர்களில் இருப்பவர்களின் குடும்பத்திற்கு நியாயமான உரிய இழப்பீடு அரச வழங்க வேண்டும். ஆனால், இந்த அரசுக்கு அந்த எண்ணம் இல்லை.
அண்ணாமலை பற்றி செல்லூர் விமர்சனம் செய்ததும் செல்லூர் ராஜ் பற்றி அண்ணாமலை விமர்சனம் செய்து வருவதும் குறித்த கேள்விக்கு. பாஜக கூட்டணி எங்களுக்கு தொடர்கிறது என, பொதுச் செயலாளர் கூறியுள்ளார். தனிப்பட்ட விமர்சனம் பற்றி கருத்து சொல்ல அவசியம் இல்லை. யார் சொல்கிறார், யார் சொல்லவில்லை என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு கிடையாது. எங்களுடைய பொதுச்செயலாளர் பிஜேபி கூட்டணியில் தொடர்கிறது என்று கூறியுள்ளார். இது சாதாரண பேச்சு வழக்கில் கூறுவது சகஜம்.. இதை பொருட்படுத்த வேண்டியதில்லை.மாநாட்டிற்கு பாஜகவிற்கு அழைப்பு உள்ளதா என்ற கேள்விக்கு இது பற்றி எங்களுடைய பொதுச் செயலாளர் முடிவெடுத்து நடவடிக்கை எடுப்பார்
ராகுல் காந்தி வழக்கு நீதி வென்றது என ஸ்டாலின் ட்விட்டர் குறித்த கேள்விக்கு..தண்டனை கொடுத்தால் நீதி தோற்றது என்று அர்த்தமா.? அவர் சொல்வது தவறு நீதித்துறை விமர்சிக்கும் போது அடுத்தடுத்து மேல்முறையீடுகள் உள்ளது. அவதூறு வழக்கில் மேல்முறையீடு செய்தால் அப்போது நீதி வெல்லாதா.. நீதி எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருக்கும் ஒரு நாள் வெல்லும் ஒரு நாள் தோற்கும். இதிலேயே தெரிகிறது ஸ்டாலினுடைய ஞானம்.
நியாயமான தீர்ப்பு என்பது ஒரு புறம் இருந்தாலும், என்ன வகையில் அவர் சொல்கிறார், இது நியாயமான தீர்ப்பா நல்ல தீர்ப்பா, தவறான தீர்ப்பா என்ற விமர்சனத்திற்கு ஆளாவது என்பதில் உள்ளது .
ராகுல் காந்தியின் முறையீட்டிற்கு கருத்து தெரிவித்திருக்கிறார்கள் இன்னும் முழுதாக தெரியவில்லை அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று பார்ப்போம். இவ்வளவு அவசரமாக நீதித்துறையை பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் ஸ்டாலினுக்கு இல்லை.. மற்ற தீர்ப்பெல்லாம் நியாயமற்ற தீர்ப்பா. நீதித்துறையை விமர்சனம் செய்கிறார் ஸ்டாலின் என்பது தான் பொருள்.
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் மீது மீண்டும் அமலாக்கத் துறை ரெய்டு நடத்துவது குறித்த கேள்விக்கு..நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அவர்களுக்கு கிடைத்த தகவலின் படி ஆவணங்களின்படி தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜி தானாகவே ஸ்டாலின் மீது பற்று கொண்டிருந்தால் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.அவர் ராஜினாமா செய்ய விரும்பினால் கூட ஸ்டாலின் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி பற்றி அமலாக்கத் துறையோ,அரசோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை மக்களே தெரிந்து கொண்டுள்ளனர் என்றார் ராஜன்செல்லப்பா எம்எல்ஏ..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu