வாடிப்பட்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அதிமுக நூதனப் போராட்டம்

வாடிப்பட்டி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அதிமுக நூதனப் போராட்டம்
X

வாடிப்பட்டி பேரூராட்சி கூட்டத்திலிருந்து கண்களில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு வெளிநடப்பு செய்த அதிமுகவினர்

வாடிப்பட்டி பேரூராட்சி மன்றக் கூட்டதிற்கு கறுப்பு ஆடை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள் கண்களில் கறுப்பு துணியை கட்டிக்கொண்டு வெளிநடப்பு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி உறுப்பினர்களின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இதில் ,பங்கேற்ற அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்தும் ,காலி மனைக்கு 100 சதவீத வரி உயர்வைக் கண்டித்தும், பேரூராட்சி தலைவர் ஒருமையில் பேசுவதாக கூறியும், காரசார விவாதத்தில் ஈடுபட்டனர் .

தொடர்ந்து, அவர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு வெளிநடப்பு செய்தனர்.

Tags

Next Story
ai marketing future