மதுரையில் அதிமுக மாநாட்டு புளியோதரை: ஓபிஎஸ் கிண்டல்

மதுரையில் அதிமுக மாநாட்டு புளியோதரை: ஓபிஎஸ் கிண்டல்
X

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்.

புளியோதரை போலத்தான் இந்த மாநாடு என்ன ஒரே வரியில் பதில் அளித்தபடி அவ்விடத்தை விட்டு ஓபிஎஸ் புறப்பட்டு சென்றார்.

மதுரை விமான நிலையத்தில், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு கிண்டலாக பதில் அளித்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சென்னை செல்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்தார்.அங்கு நிருபர்கள் சூழ்ந்து அவரிடம் அதிமுக மாநாடு பற்றி கேட்டனர் .

அப்போது அவர், கிண்டலாக புளியோதரை எப்படி இருந்தது நீங்கள் சாப்பிட்டீர்களா, அதுபோலத்தான் இந்த மாநாடு என்ன ஒரே வரியில் பதில் அளித்து விட்டு அவ்விடத்தை விட்டு புறப்பட்டு சென்றார். ஓபிஎஸ் இவ்வாறு கூறியதும் அங்கிருந்தவர்கள் புன்னகைத்தனர்.

அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தைத் தொடர்ந்து, அதை அதிமுக தொண்டர்கள் கொண்டாடினர். இதுவரை மௌனமாக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் புளியோதரைப் பற்றி கூறியது, அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது.

மதுரையில், அண்மையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் தொண்டர்கள் சாப்பிடுவதற்காக உணவுகள் தயாரிக்கப்பட்டன.அவ்வாறு, தயாரிக்கப்பட்ட உணவுகள் மிஞ்சியதால் மாநாடு முடிவடைந்ததும் அதை சாலை ஓரங்களில் கொட்டியதாக கூறப்படுகிறது .

இது குறித்து, பல்வேறு நாளிதழ்களில், செய்திகள் வெளிவந்தன.இந்த செய்தி குறித்து, முன்னாள் அமைச்சர் உதயகுமார் மாநாட்டைப் பற்றி பேசாமல் புளியோதரையைப் பற்றி பேசுகிறீர்களே என அறிக்கை விட்டார். இந்நிலையில் , சாலையில் கொட்டப்பட்ட புளியோதரை பற்றி கிண்டலாக ஓபிஎஸ் பேசியது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!