மதுரையில் அதிமுக மாநாடு: கடல் போல தொண்டர்கள் கூட்டம்
மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் திரண்ட தொண்டர்கள் கூட்டம்
கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய அதிமுக மாநாடு
மதுரையில் அதிமுக மாநாடு கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அக்கட்சி யின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றினார். பல்லாயிரக் கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம், வலையங்குளம் அருகே அதிமுகவின் 'வீர வரலாற்றின் பொன்விழா மாநாடு' இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக் கணக்கான தொண்டர்களும், அக்கட்சியின் நிர்வாகிகளும் வருகை தந்துள்ளனர். மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்ட அதிமுக கொடி மரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காலை 8.30 மணியளவில் கொடியேற்றினார். அப்போது ஹெலிகாப்டர் மூலமாக பூக்கள் தூவப்பட்டன.
பகல் முழுவதும் பல்வேறு தலைப்பில் கருத்தரங்குகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றனன. மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தொண்டர்கள் அனைவருக்கும் மூன்று வேளையும் சுடச்சுட உணவு வழங்கப்பட்டது. தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண், பெண் இருபாலருக்கும் தனித் தனி கழிப்பறைகளும், குடிதண்ணீர் தொட்டிகளும் போதுமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மாலை 4 மணியளவில் மாநாட்டு பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் அதிமுக பொதுச்செயலரர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தம்பிதுரை, முனுசாமி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் உரையாற்று கின்றனர். நிறைவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரை நிகழ்த்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu