திருப்பரங்குன்றத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
திருப்பரங்குன்றத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட ராஜன் செல்லப்பா
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா ,அதிமுக நிறுவனரும்,முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா கொண்டாப்பட்டது. விழாவில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா, மாவட்ட எம்.ஜி.ஆர் அணி செயலாளர் ரமேஷ், ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா கூறுகையில், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா, அதிமுக சார்பில் தமிழக முழுவதும் கொண்டாட இடைக்கால பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி உத்தரவுப்படி செயல்பட்டு வருகிறோம். கிராமம்தோறும் மக்கள் திலகத்தின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம்.
அதிமுக கொடி ஏற்றி இனிப்பு வழங்கி மற்றும் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி வருகிறோம். பிறந்தநாளை முன்னிட்டு, உறுதிமொழியும் மீண்டும் அதிமுக ஆட்சியமைப்பதற்கு இது ஒரு மக்களை சந்தித்து வருகிறோம்.
மு.க. அழகிரி உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு குறித்த கேள்விக்கு, இது அவர்கள் குடும்ப பிரச்சனை அவர்கள் நல்லுறவுக்கான சந்திப்பு ஆக இருக்கலாம் அதை பற்றி பேச ஒன்றுமில்லை. உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியிலும், இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளார்
மிக்க மகிழ்ச்சி. இந்த ஆட்சியில் அமைச்சர் மனோதங்கராஜ் செஸ் விளையாடுகிறார்..மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மராத்தான் ஒடுகிறார் மஸ்தான் கிரிக்கெட் விளையாடுகிறார். நாசர் டிராக்டர் ஒட்டுகிறார். விளையாட்டை துவக்கிவைக்க சொன்னால் விளையாட்டோடு கலந்து விடுகிறார்கள்.
இளைஞர் நலன் மற்றும் விளையாடுத்துறை அமைச்சர் உதயநிதி ஜல்லிக்கட்டை துவக்கிவைக்க வந்துள்ளார் மகிழ்ச்சி, ஆனால், மாடுபிடிக்க போய் விடுவாரே என அச்சம் வந்தது. நல்லவேளை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து துவக்கி வைத்ததோடு சரி. இந்த அரசு எந்த ஒரு திட்டத்தையும் விளையாட்டாக தான் செய்கிறது. என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu