மதுரையில், கோயில்களில் அமாவாசை தர்ப்பணம் செய்ய ஏற்பாடுகள் தீவிரம்..!

தர்ப்பணம் செய்தல் (கோப்பு படம்)
பித்ருக்களுக்கு அமாவாசை தர்ப்பணம்
மதுரை:
இம்மாதம் , 17-ஆம் தேதி திங்கட்கிழமை ஆடி மாத பிறப்பு மற்றும் ஆடி அமாவாசையை ஒட்டி மதுரை நகரில் உள்ள கோயில்களில் அமாவாசை சிறப்பு தர்ப்பணம் நடைபெறுகிறது. முன்னோர்களுக்கு அமாவாசை மற்றும் மாத பிறப்பு என்று தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசை நாட்களில் ,
பித்ருக்களுக்கு முன்னோர்களுக்கு) தர்ப்பணம் செய்வது உகந்தது என்று நமது முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர். அதனால் அன்றைய தினங்களில் தங்களது தாய், தந்தையரை எண்ணி அவர்களை வணங்கி தர்ப்பணம் செய்கிறார்கள். அமாவாசை தினத்தில், பெற்றோர்களுக்கு வாரிசுகள் தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியமான செயலாகும்.
இதை எல்லோரும் முறையாக தர்ப்பணம் செய்வதற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளி செய்வது வழக்கம். மதுரை நகரில் பல்வேறு இடங்களில் கோயில்களில் அமாவாசை தர்ப்பணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆடி அமாவாசை தர்ப்பணம் நடைபெறும் இடங்கள்:
மதுரை, அண்ணாநகர், யாணைக்குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்தில், 17.07.23..திங்கள்கிழமை காலை 6.15 முதல் 7மணி வரையிலும், காலை 7.15..மணி முதல் 8.15மணி வரை மதுரை அண்ணாநகர் வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்திலும், காலை 8.30 மணி முதல் 9.20மணி வரை , மதுரை மேலமடை மருதுபாண்டியர் தெரு அருகே வி.ஏ.ஒ. அலுவலகம் முன்புறம் உள்ள அருள்மிகு சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்து வைக்கப்படும்.
தர்ப்பணம் செய்ய வருவோர்
கறுப்பு எள் பாக்கெட், வாழைப்பழம், பூக்கள், விளக்குகள் (கோயில் வாசலில் கிடைக்கும்)
மேலும், தர்ப்பணம் செய்ய தாம்பாளம், டம்ளர் கொண்டு வரவேண்டும்.
பெண்கள், காய்கறிகள், அரிசி தானம் அளிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு: 9942840069, 8760919188, ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பெற்றோர்களுக்கு செய்யும் நன்மைகள்
பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்களுக்கு உணவுகூட தராமல் அவர்களை நிம்மதியாக வாழவைக்காதவர்கள், அவர்கள் மீது அன்பு செலுத்தாதவர்கள், பெற்றோர் இறந்த பின்னர் பித்ரு காரியங்களை முறைப்படி செய்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எவ்வித பயனும் கிடைப்பதில்லை. குலதெய்வ வழிபாட்டை முறைப்படி செய்தாலும் கூட பலன் கிடைக்காது என்கிறார்கள் முன்னோர்.
அதனால் பெற்றோர் உயிருடன் இருக்கும்போது அவர்கள் மீது அன்பு செலுத்துங்கள். வயதான காலத்தில் அவர்களுக்கு தேவையானதை செய்யுங்கள். சிறு குழந்தையாய் நாம் இருந்தபோது நம்மை வளர்த்தெடுக்க அவர்கள் பட்ட கஷ்டங்களை நாம் பின்னாளில் அவர்களுக்கு செய்யவேண்டும். அதுவே நம்மை மகிழ்ச்சியோடும், வளமோடும் வாழவைக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu