மதுரை விமான நிலையத்தில் கூடுதலாக தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்: எம்.பி. கோரிக்கை

மதுரை விமான நிலையத்தில் கூடுதலாக தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்: எம்.பி. கோரிக்கை
X

மதுரை விமானநிலைய விரிவாக்க ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் பங்கேற்ற எம்பி -கள் ்மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன்

மதுரை விமான நிலைய விரிவாக்கம் ஆலோசனைக்குழு கூட்டத்தில் எம்.பி மாணிக்கம் தாகூர் மதுரை எம்பி சு.வெங்கடேசன் பங்கேற்பு

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாக விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூரும் , மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 5 சதவீத நிலத்தை நீர்நிலை வகை மாற்றம் செய்ய தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எம்.பி சு வெங்கடேசனும் தெரிவித்தனர்.

மதுரை விமான நிலைய விரிவாக்கம் ஆலோசனைக்குழு கூட்டமானது, ஆலோசனைக்குழுத் தலைவர் மாணிக்கம்தாகூர் எம்.பி தலைமையில் துணைத் தலைவர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மதுரை விமான நிலைய விரிவாக்கப்பணிகள் குறித்து, மிக விரிவாக விவாதிக்கப்பட்டது.

24 மணி நேரமும், இயங்கும் தன்மையில் சர்வதேச விமான நிலையமாக மதுரையை மாற்றுவது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்துவது என்றும்,மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்தில் புதியதாக 5 விமான நிறுத்துமிடங்களும் , 2 ஹெலிபேட்களும் , ஒரு கூடுதல் பயணிகள் பாதையும் இணைக்கப்பட்டு வாகன நிறுத்தம் உள்ளிட்டு பேருந்து வசதிகள் அனைத்தும் சிறந்த முறையில் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்தியாவின் 34 விமான நிலையங்களில் தூய்மையான விமான நிலையங்களில் முதலிடத்தையும் , அதேபோல, பயணிகளின் சேவைத்தர மதிப்பீட்டில் இந்திய விமான நிலையங்களில் 4வது இடத்தையும், மதுரை விமான நிலையம் பெற்றுள்ளது.அதற்காக, மதுரை விமான நிலையத்தின் அதிகாரிகளை எம்பிகள் பாராட்டினர்.

மதுரை விமான நிலையத்தில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில்:மதுரை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சனையில் நிலம் கையகப்படுத்துதல் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது.நீர்நிலை வகைமாற்றம் செய்வதில் மட்டுமே நிலுவையில் உள்ளது. இது முழுவதும் மாநில அரசு சம்பந்தப்பட்டது. எனவே, மாநில அரசு முதல்வர் விரைவாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். மதுரை விமான நிலையத்தில், முக்கியத்துவமாக சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது, 24 மணி நேரமும் விமான சேவை இயக்குவது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.

இதுகுறித்து, மத்திய விமான துறை அமைச்சரிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையம் இருக்க வேண்டும். மதுரை விமான நிலையம், 24 மணி நேரம் செயல்பட மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இதற்காக வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இது குறித்து பிரச்னை எழுப்ப உள்ளோம். தேவைப்பட்டால், தென்மாவட்டங்கள் எம்பி களையும் சேர்த்து, விமானத் துறை அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்புடன் நிலம் கையகப்படுத்துதல் பணி நிறைவடைய உள்ளது நீர் நிலைகளுக்கான குழுக்கள் முடிந்தவுடன் மீதமுள்ள 5 சதவீத இடங்களும் கொடுக்கப்பட்டுவிடும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக, மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது விரைவாக முடியும் என்ற எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

மதுரை விமான நிலையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு மத்திய விமானத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர். இக்கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், காவல்துணை ஆணையர் தங்கதுரை, விமான நிலைய இயக்குநர் பாபுராஜ் , ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!