மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி- குத்திக்கொலை

மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி- குத்திக்கொலை
X
மதுரை அருகே தோப்பூரில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறி செய்து குத்திக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த வட மாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, தோப்பூர் பகுதியில் அரசு காசநோய் மருத்துவமனை உள்ளது.இங்கு புதிய கட்டுமான பிரிவு பணிக்காக வடமாநில தொழிலாளர்கள் ஏராளமான போர் வேலை பார்த்து வருகின்றனர்.இதில் பீகார் மாநிலம் சேர்ந்த உஜாமு பசுவன் என்பவரின் மகன் சுபாஷ் ( வயது 21 ),போபல் பசுவன் என்பவரின் மகன் சனி (வயது 21). ஆகிய இருவரும் கட்டுமான பணி வேலையை முடித்து இரவு சாப்பாட்டிற்காக அரிசி மற்றும் காய்கறி பழங்கள் வாங்க கூத்தியார்குண்டு பகுதிக்கு சென்றனர்.

பின்னர் ,அனைத்து பொருட்களையும் வாங்கி கொண்டு கால்நடையாக நடந்து தோப்பூர் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது, பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் இருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி பணம் செல் போன் ஆகியவற்றை கேட்டுள்ளனர். இவர்கள் தரமறுக்கவே, வழிப்பறி செய்ய வந்த நபர்கள் கத்தியால் தாக்கியதில் இருவரும் பலத்த காயம் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பைக்கில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் பலத்த காயம் அடைந்த சுபாஷ் சம்பவ இடத்திலே பலியானார். மேலும், பலத்த காயம் அடைந்த சனி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சம்பவம் குறித்து, தகவல் அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ,இறந்த சுபாஷின் உடலை உடற்கூறுப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தோப்பூர் பகுதியில் வழிப்பறி சம்பவத்தில் வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!