மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச்சுவற்றில் பொருத்தப்பட்டுள்ள அஞ்சல்துறையின் தபால் பெட்டி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டபணிகள் துவங்காத நிலையில் ஒன்றிய அரசின் அஞ்சல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூரில் கடந்த 2019ல் பிரதமர் மோடியால் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜப்பானிய ஜெயிக்கா நிறுவனத்துடன் இணைந்து 1694 கோடி ரூபாய் செலவில் கட்டுமான திட்டத்திற்கான ஒப்புதல் பெறப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கீடாக 1974 கோடி ரூபாய் என ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் ,மத்திய அரசின் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் மதுரை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மதுரையில் எய்ம்ஸ் பணி நிறைவுற்றதாக கூறி விரைவில் திறப்பு விழா நடைபெறும் எனக் கூறி சர்ச்சையை கிளப்பினார்.
எய்ம்ஸ் அமைய உள்ள வளாகத்தில் விருதுநகர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர். சு. வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்த பின்னர் செய்தியார்களை சந்தித்தனர், எவ்வித கட்டிட பணியும் நிறைவில்லை, சுற்று சுவர்மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அங்கு அலுவலகம் செயல்படுவது போல் தபால் பெட்டி ஒன்று ஒன்றிய அரசின் அஞ்சல்துறை சார்பில் வைக்கப்பட்டிருப்பது மதுரை மாவட்ட மக்களைஅவமானப்படுத்துவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu