ஒரே நாளில் 63 திருமணங்கள்: களைகட்டிய திருப்பரங்குன்றம் கோயில்

ஒரே நாளில் 63 திருமணங்கள்: களைகட்டிய திருப்பரங்குன்றம் கோயில்
X

கோவிலில் சாமி தரிசனம் செய்யும் தம்பதியினர்.

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மூகூர்த்த நாளான இன்று 63 திருமணங்கள் நடைபெற்றதால் கோயில் முழுவதும் கூட்ட நெரிசலாக காணப்பட்டது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, தமிழ் கடவுள் முருகனின் முதல் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்பிறை சுபமுகூர்த்த நாள் ஆன இன்று அறுபத்தி மூன்று திருமணங்கள் நடைபெற்றது. நாற்பத்தி எழு திருமணங்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. மீதமுள்ள திருமணங்கள் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதேபோல், மதுரை பெத்தானியபுரம் பகுதியை சேர்ந்த சரவணன்-அபிநயா தம்பதிகளின் குழந்தைக்கு முதல் உணவு ஊட்டும் நிகழ்வாக அன்னபிரசன்னம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Tags

Next Story