மதுரை அருகே 4.50 லட்சம் பண மோசடி: தேங்காய் வியாபாரிக்கு வலைவீச்சு

மதுரை அருகே 4.50 லட்சம் பண மோசடி: தேங்காய் வியாபாரிக்கு வலைவீச்சு
X

பைல்  படம் 

மதுரை அருகே 4.50 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக தேங்காய் வியாபாரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அடகு நகையை மீட்டு விற்கவேண்டுமென கூறி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ 4லட்சத்து 53 ஆயிரம் மோசடி செய்த தேங்காய் வியாபாரியை போலீசார் தேடிவருகின்றனர்.

மதுரை கல்லம்பலை சேர்ந்தவர் சங்குள்காந்தி.இவர் தேங்அகாய் வியாபாரரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று விருதுநகர் புல்லக்கோட்டை ரோட்டில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்திற்கு போன்செய்துள்ளார்.

அந்த நிறுவனம் அடகு நகையை மீட்டு விற்பனைசெய்து கொடுக்கும் நிறுலனமாகும்.இவர் போன்செய்த போது அதன் மேனேஜர் சரவணக்குமார் எடுத்து பேசியுள்ளார். அப்போது பேசிய சங்குள்காந்தி மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் வங்கியில் தனது நகைகள் அடகுவைக்கப்பட்டிருக்கிறது அதை மீட்டுத்தரவேண்டும் என்று கூறியுள்ளார்.

அடகு நகையின அசலும் வட்டியும் சுமார் 4லட்சத்து 53ஆயிரம் என்றும் அதைக்கொண்டுவந்து தந்தாேல் நகையை திருப்பிக்கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து நிதிநிறுவன மேனேஜர் சரவணகுமார்,அவருடன் வேலைபார்க்கும் சபபாண்டியுடன் காரில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள வங்கிக்குச்சென்றனர். அங்கு அவர்களுக்காக சங்குள்காந்தியும் மற்றொருவர் சரவணன் என்ற கார்த்திக்என்பவரும் காத்திரருந்தனர். அவர்கள் மேனேஜர் சரவணகுமாரிடம் அடகு ரசீதுகளை காட்டி ரூ 4லட்சத்து 53ஆயிரத்தைபெற்றனர்.

தாங்கள் வங்கியில் பணத்தைசெலுத்தி நகைகளை மீட்டு வருவதாகச்சொல்லி வங்கிக்குள் சென்றனர்.நிதி நிறுவண சரவணனும் அவருடன் வந்த சுப பாண்டியும் காரில் காத்திருந்தனர்.சற்று நேரந்தில் வெளியே வந்த சங்குள்காந்தி தான் பணத்தை வங்கியில் கட்டிவிட்ணதாகவும் வங்கிமேலலாளர் வெளியே சென்றிருப்பதால் சிறிது நேரமாகும் என்று கூறியுள்ளார். அதனால் அதுவரை காத்திருக்கவேண்டாம் என்று சொல்லி அவர்கள் இருவரையும் ரிங்ரோட்டில் உள்ள தேங்காய்க்கடைக்கு அழைத்துச்சென்றார்.

பின்னர் அங்கிருந்து சங்குள்காந்தியும் ,சரவணன் என்ற கார்த்திக்கும் அங்கிருந்து நைசாக நழுவிச்சென்றுவிட்டனர்.அவருக்காக காத்திருந்த நிதி நிறுவன மேனேசருக்கு பின்னர் அவர்கள் ஏமாற்றி பணத்தை மோசடி செய்து சென்றது தெரியவந்தது.

இந்தச்சம்பவம் குறித்து மேனேஜர் சரவணக்குமார் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரை ஏமாற்றிசென்ற சங்குள்பாண்டி, சரவணக்குமார் இருவரையும் தேடிவருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!