கனமழையால் மதுரையில் தாமதமாக தரையிறங்கிய 3 விமானங்கள்

கனமழையால்  மதுரையில் தாமதமாக தரையிறங்கிய  3    விமானங்கள்
X

பைல் படம்

கன மழை காரணமாக 50 நிமிடங்கள் தாமதமாக 3 விமானங்களும் மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கின

பலத்த மழை காரணமாக 50 நிமிட தாமத்திற்கு பின்னரே 3 விமானங்களும் மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கின:

மதுரை விமான நிலையத்தில் மாலை 6 மணிக்கு இறங்கவேண்டிய பெங்களுரு, 6.20 மணிக்கு இறங்கவேண்டிய சென்னை விமானம். 6.40 மணிக்கு இறங்கவேண்டிய ஹைதராபாத் விமானம் ஆகிய 3 விமானங்களும், மதுரை விமான நிலையத்தில் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்காமல் 50 நிமிடம் சுற்றிதிரிந்தது.

இதனால், மதுரை விமான நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களில் பரபரப்பாக காணப்பட்டது. 50 நிமிட தாமத்திற்கு பின் வானிலை சீரானவுடன் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. சென்னை செல்லவேண்டிய விமானம் 87 பயணிகளுடன் 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. மதுரை நகரில் அண்ணாநகர், கருப்பாயூரணி, கோரிப்பாளையம், வில்லாபுரம், அவனியாபுரம் பகுதிகளில், திடீரென மழை பெய்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!