/* */

மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை

ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் உள்பட ரூ 110 கோடி செலவில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

மதுரையில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை
X

மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட பகுதியில் நடைபெறும் சுற்றுச்சுவர் கட்டும் பணி

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர சேவை தொடங்கபடுகிறது.

மதுரை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் மற்றும் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் உள்பட ரூபாய் 110 கோடி செலவில் பணிகள் நடைபெறுகிறது.

மதுரை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் ரூபாய் 85 கோடி செலவிலும் 5 அடுக்கு மாடிகள் கொண்ட புதிய அலுவலகம். கட்டுமான பணிகள் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதேபோல் மதுரை விமான நிலையத்தில் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் சுமார் புதிதாக கையகப்படுத்தப்பட்ட இடங்களில சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணிகளும் வரும் அடுத்த (2024)ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் கூறினார்

மேலும் விமான நிலைய ஓடு பாதை விரிவாக பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீர் பிடிப்பு பகுதியாக உள்ள ஈச்சனேரி கிராம பகுதியில் 2% சத இடத்தில் ரன் வே ஒடுபாதை அமைக்க சுற்றுச்சூழல் மற்றும் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் விரைவில் பணிகள் துவங்கும் என விமான நிலைய அதிகாரிகள் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் வரும் ஏப்பரல் மாதம் முதல் இரவு நேர சேவை துவக்கப்படுகிறது.இதற்காக மதுரை விமான நிலையத்திற்கு புதிய விமான சேவைகள் கொண்டுவரவும். பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்

Updated On: 29 March 2023 6:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  2. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  3. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  7. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  8. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்