மதுரை: ஓய்வு பெற்ற ஆசிரியரின் வங்கி கணக்கில் ரூ.12 லட்சம் அபேஸ்

மதுரை: ஓய்வு பெற்ற ஆசிரியரின் வங்கி கணக்கில் ரூ.12 லட்சம் அபேஸ்
X

வங்கி கணக்கில் பணத்தை இழந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் நாராயணன். 

மதுரையில், ஓய்வு பெற்ற ஆசிரியரின் வங்கி கணக்கில் ரூ.12 லட்சத்தை மர்ம நபர்கள் திருடியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் தெரு பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு வயது 70. இவர் , தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது தொலைபேசி எண்ணுக்கு அழைத்து பேசிய மர்மநபர், வங்கி மேலாளர் என்று அறிமுகம் செய்து கொண்டு, நாராயணனின் வங்கி விவரங்களை கேட்டுள்ளார். நாராயணனும், வங்கி அதிகாரிகள் என நினைத்து அனைத்து தகவலையும் தெரிவித்தார்.

அதன் பின்னர், வங்கியில் இருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக, அவருக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த நாராயணன், மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

எந்த ஒரு வங்கியும் அதிகாரிகளும் ஏடிஎம் கார்டு மாற்றம் செய்வதற்கு தொலைபேசி மூலமாக அழைக்க மாட்டார்கள் எனவும், இதுபோன்று தொலைபேசி அழைப்பு வந்தால், இணைப்பை உடனடியாகத் துண்டித்து விடுங்கள் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!