மதுரை தியாகராஜர் கல்லூரியில் 20ல் பிரிந்து 60ல் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
மதுரை தியாகராஜா கல்லூரியில், பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரையில் இருபதில் பிரிந்து அறுபதில் சந்தித்து பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர் மாணவர்கள்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் 1981-1984கல்வியாண்டில் இளங்கலை தாவரவியல்பாடப்பிரிவில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைப்பாளர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். உதவிஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் வரவேற்றார். இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் 80வயதுக்கு மேற்பட்ட கேசவன், பாபுராஜ், சேகர், கண்ணன், செல்வராஜ், சுப்பிரமணியன், சாந்தகுரு ஆகியோரிடம் பழையமாணவர்கள் 60வது வயதில் ஆசிபெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், பழையமாணவர்கள் பலர் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது.- மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நெறிப்படுத்தவகைப்படுத்தமுறைப்படுத்த கல்வி என்பது கண்ணாக உள்ளது. ஒருமுறை தான்கற்ற கல்வி ஏழுதலைமுறையினருக்கும் பயனளிக்கும் என்று திருவள்ளுவர் கூறியது போல் நாம் எல்லோரும் இந்த கல்லூரியில் பயின்றோம்.
அன்றைய காலகட்டத்தில் ஒழுக்கத்தையும், நற்பண்புகளையும் நமக்கு போதித்த ஆசிரியர்கள் இன்று நம்முன்னே இருக்கிறார்கள் என்பது பெரிய அதியசமாகும். நம்மைபோல எண்ணில்லா மாணவர்களை வாழ்க்கையில் உயர்த்துவற்காக ஏற்றிவிட்டஏணிப்படிகளாய் எந்த ஒரு ஆதாயத்தையும் எதிர்பார்காமல் நமக்காக கல்வித்தொண்டு செய்தவர்கள் அவர்களின் ஆசியினை பெற்று மேலும், பலநலங்களையும், வளங்களையும் பெறுவோம். இவ்வாறு அவர்கள் பேசினர்.
முடிவில் தியாகராஜன் நன்றி கூறினார்.
அறுபது வயதிற்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் என்பது வயதிற்கு மேற்பட்ட தங்களது பேராசிரியர்களிடம் ஆசி பெற்ற நிகழ்ச்சி இரு தரப்பினரிடமும் ஒருவித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu