நீட் தேர்வு பற்றி பேச முன்னாள் அமைச்சருக்கு, தகுதியில்லை: காங்கிரஸ் எம்.பி. சாடல்.
மதுரையில், திரையரங்கில் கக்கன் திரைப்படம் பார்த்த விருதுநகர் எம்.பி.
படம் பார்த்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாணிக் தாகூர் எம்பி, திரைப்படம் கக்கன் அவர்களின் வாழ்வில் சொல்லப்படாத உண்மைகளை மையமாக வைத்து தியாக்கத்தையும்., நேர்மையையும் கொண்டு படம் இயக்கப்பட்டுள்ளது.. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். வரலாற்று ஆவணமாக இருக்க வேண்டும் என்று கூறினார்
தற்போது சீமானும் நீட் தேர்வு மற்றும் கோடநாடு குறித்து பேசி வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசு நீட் தேர்வுக்கு விடை சொல்ல வேண்டும் தமிழகத்தில் நீட் வேண்டாம் என்று மத்திய அரசு எப்போது முடிவு செய்கிறதோ அப்போது நீட் தமிழகத்திற்கு வராது. பாஜக அரசு இருக்கும் வரை நீட் தேர்வு பிரச்சனை முடிவுக்கு வராது. அதற்கு முற்று புள்ளி வைக்க மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல்காந்தி பிரதமரானால் நீட் நிறுத்தப்படும் என்றார்.
அதானிக்கும், அம்பானிக்கும் வேலை செய்யும் மோடி அரசு மீது, சிலிண்டர் விலை உயர்வு போன்ற வற்றால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனால் தான் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்று கூறினார்
நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கண்டனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக் தாகூர், உதயகுமாரை பொறுத்தவரை அதிமுக மாநாட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு சாப்பாடு போட முடியாத ஒருவர் அவர் மீது எடப்பாடி பழனிச்சாமி கடும் கோபத்தில் உள்ளார். மதுரைக்கு மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு ஒழுங்கா சாப்பாடு போட முடியாமல், கெட்டுப்போன புளியோதரை போட்ட புண்ணியவான் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். முதலில், அவர் அதை சரி செய்யட்டும். நீட் பிரச்சனையைப் பொறுத்தவரை. அதிமுக அரசு நாடகமாடியது என்று தமிழக மக்களுக்கு தெரியும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறோம். இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் ராகுல் காந்தி வரும்போது நீட் விலக்கப்படும் என்றார்.
காவேரி விவகாரத்தில் தமிழக அரசு உரிய பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,
காவேரி விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. எந்த இடத்திலும் தங்களது உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை. இதை அரசியல் செய்வது பாஜகவும் பொம்மையும் தான். கர்நாடகாவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை நிறுத்தியவர்கள் போராட்டத்திற்கு ஏவி விட்டது பொம்மைதான். பொம்மையும், அண்ணாமலையும் தான் காவிரி பிரச்சனைக்கு துரோகிகள் தவிர வேற யாரும் இல்லை என்று கூறினார்
தொடர்ந்து, இந்திய சினிமாக்களுக்கு தேசிய விருது வழங்கிய நிலையில் மாமனிதன் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்காதது மிகப்பெரிய துரோகம் மத நல்லிணத்தை மையப்படுத்திய படம். 52 நாடுகளில் 52 விருதுகளைப் பெற்று தேசிய விருதுக்கு முழு தகுதி பெற்ற படத்திற்கு விருது கொடுக்காமல், காஷ்மீர் பைல்ஸ் என்று பிரிவினை வாத படத்திற்கு விருது கொடுத்திருக்கிறது இந்த அரசு தேசிய விருதை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது. மாமனிதன் படத்திற்கு விருது வழங்காதது கண்டிக்கத்தக்கது வேதனை அளிக்கிறது என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu