/* */

திராவிட இயக்கத்திற்கு ஒரே தலைமை மு.க.ஸ்டாலின்தான்:அமைச்சர் ஐ.பெரியசாமி

திராவிட இயக்கத்திற்கு ஒரே தலைமை மு.க.ஸ்டாலின்தான் என்று மதுரையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திராவிட இயக்கத்திற்கு ஒரே தலைமை மு.க.ஸ்டாலின்தான்:அமைச்சர் ஐ.பெரியசாமி
X

மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி.

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா நான்காம் அலையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது. வெறும் ஆய்வில்தான் நான்காம் அலை வரும் என்று கூறுகின்றனர். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் நாம் தெளிவாக இருக்கிறோம். கலைஞரைபோல முல்லைப்பெரியாறு விவகாரத்தில் முதல்வர் உறுதியாக நிற்கிறார். நம் உரிமையை நிச்சயம் விட்டுக்கொடுக்க மாட்டார். அண்டை மாநிலங்களோடு நல்ல உறவு கொண்டு நதிநீர் விவகாரத்தில் கூடுதல் பங்கீட்டை பெற நடவடிக்கை எடுப்பார்.

நகைக்கடன் தள்ளுபடி எல்லா இடங்களிலும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். அதிமுக திமுகவில் சங்கமம் ஆகும் என பதவி மயக்கத்தில் அமைச்சர் பேசுவதாக ஒபிஎஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, திமுகவில் இருந்து வந்தது தான் எல்லாம். எல்லோரும் தாய் கழகத்திற்கு திரும்ப வந்து கொண்டுள்ளனர். அதிமுகவுக்கு எந்த மாவட்டத்திலும் தலைமை கிடையாது. திராவிட இயக்கத்திற்கு ஒரே தலைமை மு.க.ஸ்டாலின்தான். பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறாரா என்ற கேள்விக்கு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்து கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்திய அளவில் உள்ள பிரச்னைகளுக்கு எந்த அளவில் பணியாற்ற வேண்டுமோ கலைஞரைபோல் செயல்பட்டு வருகிறார். உக்ரேனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க முழு மூச்சுடன் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார்.


Updated On: 2 March 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்