தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை-அமைச்சர் தகவல்

தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை-அமைச்சர் தகவல்
X

அமைச்சர் எ.வ.வேலு

தமிழக நிதி நிலை அறிக்கை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதி நிலை அறிக்கை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மதுரை வருகை தந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஆட்சியர்களிடம் அறிக்கை கேட்டு உள்ளோம். சாலை பணிகளில் நில எடுப்பின் காரணமாக பணிகள் கால தாமதம் ஏற்படுகிறது. நிலம் எடுக்க மட்டும் 5 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். ரயில்வே பாலம் கட்டுவதில் ஏற்படும் தாமதத்தை குறைக்க, ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்க உள்ளோம். சாலை ஓரங்களில் மரங்கள் நட முதலமைச்சர் ஆணை பிறப்பித்து உள்ளார். அதனை விரைந்து செயல்படுத்த உத்தரவு இடப்பட்டு உள்ளது.

பழனி - கொடைக்கானல் பாதையை தேசிய நெடுஞ்சாலையில் இணைத்து தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் - மூணாறு சாலையை கேரள அரசுடன் பேசி தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்போம். கீழடி அகழாய்வு இடத்திற்கு செல்லும் சாலையையும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள நகரங்கள், பேரூராட்சி அனைத்திலும் புறவழிச்சாலை தரமாக அமைக்கப்படும். மதுரை வண்டியூர் கண்மாயை சுற்றுலா தலமாக மாற்ற துறை சார்ந்த அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் நூலகம் அமைக்க மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடம் பொருத்தமாக உள்ளது. அதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பணிகளை விரைவு படுத்துவோம்.

தமிழக நிதி நிலை அறிக்கை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 5 ஆண்டு ஆட்சி முடிவதற்குள் நிதி நிலையை சீர் செய்வோம். குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது, அது கண்டிப்பாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!