காரியாபட்டியில் சோலார் மின் விளக்கு திட்டம்: பேரூராட்சித் தலைவர் தொடக்கம்

காரியாபட்டியில் சோலார் மின் விளக்கு திட்டம்: பேரூராட்சித் தலைவர்  தொடக்கம்
X

காரியாபட்டியில் அமைக்கப்பட்டுள்ள  சேலார் மின் விளக்கை தொடக்கி வைத்த பேரூராட்சித்தலைவர் செந்தில்

இராமநாதபுரம் எம்.பி. மேம்பாட்டு நிதி திட்டத்தில் காரியாபட்டி பேரூராட்சியில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது

காரியாபட்டியில் சோலார் மின்விளக்கு திட்டத்தை பேரூராட்சித்செந்தில் தொடக்கி வைத்தார்.

இராமநாதபுரம் எம்.பி. மேம்பாட்டு நிதி திட்டத்தில் சோலார் மின்விளக்குகள் அமைக்க காரியாபட்டி பேரூராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோவில் , ஆசிரியர் காலனி, எழில்நகர் உள்ளிட்ட 6 இடங்களில் சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. காரியாபட்டி பேரூராட்சித் தலைவர் செந்தில், சோலார் மின்விளக்கும் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். காரியாபட்டி பேரூராட்சி மக்களின் கோரிக்கை ஏற்று, சோலார் மின்விளக்கு அமைக்க ஏற்பாடு செய்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் நிதி ஒதுக்கீடு செய்த இராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனிக்கும் பொதுமக்கள் சார்பாக பேரூராட்சி தலைவர் செந்தில் நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!