சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் திறப்பது எப்போது சமூக ஆர்வலர்கள் கேள்வி

சோழவந்தான் ரயில்வே மேம்பாலம் திறப்பது எப்போது  சமூக ஆர்வலர்கள் கேள்வி
X

சோழவந்தான் அருகே கட்டிமுடிக்கப்பட்ட மேம்பாலம்

சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது.

சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிகள் நிறைவு பெற்று திறக்கும் நிலையில் இருந்தது. ஆனால், மேம்பாலத்திற்கு கீழே உள்ள அணுகு சாலை பணிகள் இன்னும் முடியாததால் திறப்பு விழா தாமதமாவதாக கூறப்படுகிறது. ஆகையால், அந்தபணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உடனடியாக மேம்பாலத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

இது குறித்து, முன்னாள் ராணுவ வீரர் தங்கராஜ் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், சுமார் 40 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு ,கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் அதற்கு பின்பு வந்த ஆட்சியினரால் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரயில்வே மேம்பால பணிகள் விரைந்து கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பணிகள் நடைபெற்று சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. ஆனால், மேம்பாலத்திற்கு கீழே உள்ள அணுகுசாலை அதாவது சர்வீஸ் ரோடு பணிகள் நிறைவடையாததால், மேம்பாலம் திறப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் அணுகு சாலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!