வாடிப்பட்டி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

வாடிப்பட்டி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
X
மதுரை மாவட்டம் வாடிபட்டியில், ஜவுளி கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்ற்னார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைகட்டி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன்; இவரது மகள் வயது (21) வைசாலி. இவர், வாடிப்பட்டியில் உள்ள ஜவுளி பூங்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வேலைக்கு சென்ற வைசாலி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து உறவினர் வீடுகளில் தேடியும் பல இடங்களில் போய்ப்பார்த்தும் அவர் கிடைக்காததால், இச்சம்பவம் குறித்து, வாடிப்பட்டி காவல்நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி