தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென கரும்பு விவசாயிகள் வலியுறுத்தல்
பைல் படம்
தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், விருதுநகர், பகுதி கரும்பு விவசாயிகள் பதிவு செய்த கரும்பு இந்த ஆலையில் அறைக்கப்பட்டது.கடந்த 2 ஆண்டுகளாக வறட்சி, மழையின்மை காரணமாக ஒரு வருடம் 1,200 ஏக்கர் கரும்பு அதற்க்கு அடுத்த வருடம் 900 ஏக்கர் கரும்பு பதிவுசெய்யப்பட்டது.இந்த ஆலைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பதிவு செய்யப்படாத கரும்பு 20 ஆயிரம் தான் கிடைக்கும்.
ஆனால் இந்த ஆண்டு 2000 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டது. அதாவது 60 ஆயிரம் டன் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறைந்த அளவு கரும்பு வைத்து இயக்கினால் நஷ்டம் ஏற்படும்.எனக் கூறப்பட்டு ஆலய தொடர்ந்து இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து 2021 முதல் 2022 ஆம் ஆண்டுக்கான அரைவையே தொடங்க வலியுறுத்தியும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏறத்தாழ நாற்பத்தி ஆறு நாட்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது.
கரும்பாலை முன்பு காத்திருப்பது, பொங்கலிடுவது என வித்தியாசமான வினோத தொடர் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வந்ததன் அடிப்படையில் இதனால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.தேர்தல் நடந்து முடிந்தபின் ஆலை திறக்கப்படும் என விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் ஆலய திறக்கப்படவில்லை?
இதுகுறித்து அப்பகுதி கரும்பு விவசாயிகள் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு .க .ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மக்களுக்கு வாழ்வளிக்கும் அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை கூட்டுறவு ஆலை திறக்கப்படும் என்று பேசினார். அத்துடன் திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று கூறப்பட்டது.ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை.
இந்த ஆலை மற்றும் அதனை சார்ந்த பள்ளி, மைதானம், மருத்துவமனை ஆகியவற்றில் சேர்ந்து சேர்த்தால் 137 ஏக்கர் வரும்.சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்குவதால் காரணம் காட்டி தனியாரிடம் ஒப்படைத்து விட்டால் கமிஷன் கிடைக்கும் என ஆளுங்கட்சியினர் நினைக்கின்றனர் என்று தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன்பு தொடர் போராட்டம் நடத்திய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் என் .பழனிச்சாமியிடம் இதுகுறித்து கேட்டதற்கு அலங்கா நல்லூர் ஆலையை இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் மற்றும் வேளாண்துறை அமைச்சர் எம் .ஆர். கே. பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம் . தேர்தல்காகத போராட்டத்தை கைவிடுவோம். ஆலை திறக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை நடத்துவோம் என்று உறுதிபட கூறினார்.
தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் சொன்னதை போல ஆலையை இயக்க வேண்டும். இயக்குவார் என நம்புகிறோம். முதல்வர் மு.க. ஸ்டாலின் இதை நிறைவேற்ற முன்வருவாரா என்ற கேள்வியை விவசாயிகள் முன் வைத்துள்ளனர்.தற்பொழுது தேனீர் கடைகளில் 10 ரூபாய் விற்ற டீ,யின் விலை 12 ஆக உயர்ந்துள்ளது . 12 ரூபாய் விற்ற காபி விலை 15 ஆக உயர்ந்துள்ளது.இனிப்பு வகைகள் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் சர்க்கரை தட்டுப்பாடு. இதனை கருத்தில் கொண்டு கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவில் சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய சங்கத்தினர் மற்றும் அலங்காநல்லூர் பொதுமக்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.இல்லையெனில் தொடர் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu