சோழவந்தான் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு
பைல் படம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் .
அப்பொழுது ரயில் நிற்கும் இடம் அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வு மேற்கொண்ட போது சோழவந்தான் கிராம பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.மனுவில், சோழவந்தான் ரயில் நிலையத்தில் கிரேட் சி அல்லது கிரேட் டி தரத்திற்கு உயர்த்த வேண்டும் .1972 ஆம் ஆண்டு முதல் சோழவந்தான் ரயில் நிலையம் நின்று சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை கடந்த 2008ஆம் ஆண்டு நிறுத்திவிட்டனர் .
அதனை மறுபடியும் பயணிகள் வசதிக்காக சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை ரயிலையும் ராமேஸ்வரம் திருப்பதி விரைவு இரயிலை சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சோழவந்தான் கிராம பொதுமக்கள் முன்வைத்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட தென்னக ரயில்வே பொது மேலாளர் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu