வாடிப்பட்டி அருகே கார் மோதியதில் சாலையில் சென்ற 2 பசு மாடுகள் இறப்பு

வாடிப்பட்டி அருகே கார் மோதியதில் சாலையில் சென்ற 2 பசு மாடுகள் இறப்பு
X
மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் ஸ்டேட் வங்கி அருகே, கார் மோதியதில் 2 பசுமாடுகள் இறந்தன.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், வயது 55, இவரது மாடு மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, மதுரை - திண்டுக்கல் செல்லும் தேசிய நான்கு வழி சாலையை கடக்க முயன்றன. அப்போது கேரளாவில் இருந்து மதுரை நோக்கி வந்த செரிப் வயது 35 என்பவரின் கார் இரண்டு பசு மாடுகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பசு மாடுகள் இறந்தன. இதுகுறித்து வாடிப்பட்டி போலீசார், செரிப் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!