வாடிப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒருவர் கைது

வாடிப்பட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒருவர்  கைது
X

ரங்கநாதன்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரை மாவட்ட தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த செல்வம் என்பவரது மகன் ரங்கநாதன் என்பவரை கைதுசெய்து செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா 1.6 கிலோ மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

மேலும் மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது