அலங்காநல்லூர்: வேளாண்மை துறை சார்பில் காய்கறி, பழங்கள் விற்பனை

அலங்காநல்லூர்: வேளாண்மை துறை சார்பில் காய்கறி, பழங்கள் விற்பனை
X

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வேளாண்மை துறை மற்றும் வட்டார உழவர் நலத்துறை சார்பில் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை வாகனத்தை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், வேளாண்மை துணை இயக்குனர் தனலட்சுமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வாசுகி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சுப்பிரமணியன் யூனியன் ஆணையாளர்கள் பாலச்சந்தர், பேராட்சி பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை அலுவலர் ஆமினம்மாள், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஈஸ்வரன், இந்திரஜித் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக குறைந்த விலையில் காய்கறி பழங்கள் விற்பனை செய்யப்படுவதுடன் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து தேக்க நிலை அடையாமல் விளைபொருட்களை பாதுகாக்கும் முறையில் இத்திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. தக்காளி, வெங்காயம், கத்திரி, வெண்டிக்காய், உள்ளிட்ட காய்கறிகளும் மாம்பழம், கொய்யா, பப்பாளி, வாழை உள்ளிட்ட பழ வகைகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசின் தளர்வில்லா ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ள நிலையில் வேளாண்மை துறை சார்பில் குறைந்த விலைக்கு விற்கப்படும் இந்த திட்டம் விவசாயிகள், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!