அலங்காநல்லூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது: போலீசார் அதிரடி

அலங்காநல்லூர் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 9 பேர் கைது: போலீசார் அதிரடி
X
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் போலீசார்.
அலங்காநல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் சூதாட்டம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மதுரை மாவட்ட தனி படையினருக்கு சூதாட்டம் சம்மந்தமாக கிடைத்த தகவலை அடுத்து, அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாகைக்குளம் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள்-55, ரூ.44,710 ரொக்கத்தை பறிமுதல் செய்த அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுபோன்று சமுதாய சீர்கேடுகளை உருவாக்கும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!