இருசக்கர வாகனம் மீது பேருந்து மாேதி விபத்து: கல்லூரி மாணவர் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது பேருந்து மாேதி விபத்து: கல்லூரி மாணவர் உயிரிழப்பு
X
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசு பேருந்து மோதி உயிரிழப்பு.

இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவன் அரசு பேருந்து மோதி உயிரிழப்பு.

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் இன்பராஜ். இவர் தனது நண்பர் பரத்சிங் என்பவருடன் சோழவந்தானை அடுத்த விக்கிரமங்கலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாராயணபுரம் ஊத்து அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் இன்பராஜ் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற நண்பர் பரத்சிங் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் அறிந்து அருகில் இருந்தவர்கள் காயங்களுடன் உயிருக்கு போராடிய பரத்சிங்கை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சோழவந்தான் போலீசார் ஆய்வாளர் சிவபாலன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்தில் பலியான இன்பராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் உறவினர்களிடையே கல்லூரி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!