திமுகவில் இணைந்த வேட்பாளர்: நன்றி தெரிவித்த அமமுக

திமுகவில் இணைந்த வேட்பாளர்:  நன்றி தெரிவித்த அமமுக
X
50-க்கும் மேற்பட்ட அமமுகவினர் குக்கர் சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலமாக சென்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி. தேர்தலில் 9.வது வார்டில் அமமுக சார்பில் பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் என்பவர் போட்டியிட்டு 512.ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி கூட சொல்லாமல் உடனடியாக மாற்று கட்சியில் இணைந்த கவுன்சிலர் சத்யபிரகாஷ் அவர்களை பொதுமக்கள் இனிமேல், ஒன்பதாவது வார்டு பகுதிக்கு வரகூடாது என்று பரவலாக பேசிக்கொண்டனர். இதனைக் கேள்விப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வாடிப்பட்டி ஓன்றிய செயலாளர். ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அமமுகவினர் குக்கர் சின்னத்தில் வாக்களித்த 9-வது வார்டு பகுதி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஊர்வலமாக சென்றனர்.

தங்கள் ஆதரித்து வெற்றி பெற வைத்த வேட்பாளர் எங்களை ஏமாற்றி ஏமாற்றிவிட்டார். அவர் முன்பிருந்த கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தங்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தது வார்டு மக்கள் மிகுந்த நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. முன்னதாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சோழவந்தானில் உள்ள ஜெனகை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இந்நிகழ்ச்சியில், பொதுகுழு உறுப்பினர் ராமநாதன், வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்ட நிர்வாகிகள் முனைவர் பாலு, முள்ளை சக்தி, வீரமாரிபாண்டி. தேவி. ஜாக்குலின், சோபனா மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி ரஜினிபிரபு ஓன்றிய பேரூர் நிர்வாகிகள் சின்னமருது, மீனாட்சிசுந்தரம், மதன், பிடிஆர். பாண்டியன், முருகன், வெள்ளையங்கிரி, துரைராஜ், ஜெ.பேரவை சுந்தர், செல்லபாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future