வாடிப்பட்டியில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது

வாடிப்பட்டியில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது
X
பைல் படம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கஞ்சா கடத்தி வந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி பங்களா பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டுகள் அசாருதீன், குடியரசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தனிச்சியத்தை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் என்ற ஜெகன் (வயது32) அழகுமலை (20), உசிலம்பட்டி இடையபட்டியை சேர்ந்த ஆனந்தன் (32) ஆகியோர் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த 3 பேரையும் விரட்டி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது.

அவர்களிடம் 1,750 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூ.5,100 வைத்திருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பாண்டியராஜபுரம் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாண்டியராஜபுரம் பகுதியில் பதுங்கி இருந்த கொண்டையம்பட்டியை சேர்ந்த ஜோசப்மணிராஜ் (22), திண்டுக்கல்ஆத்தூர் முத்துராஜ் (29) ஆகியோரை பிடித்தனர்.

அவர்களிடமிருந்து1,900 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரூ.16 ஆயிரத்து 170 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பயன் படுத்திய 6 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி வழக்குப்பதிவு செய்து கஞ்சாவுடன் சிக்கிய ஜெகதீஷ் என்ற ஜெகன், அழகுமலை, ஆனந்தன், ஜோசப் மணிராஜ், முத்துராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!