மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் வந்தனர்

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு:  மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் வந்தனர்
X

மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்திய பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர்

மதுரை மாவட்டத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. பரிசோதனைக்கு பிறகே, மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்

தமிழக அரசு உத்தரவுப்படி, மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு, 9, 10, 11, 12, பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளி வாயிலில், கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பள்ளி வகுப்பறைகளில் 20 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். முகக் கவசம் அணியாத மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில், முகக் கவசம் வழங்கப்பட்டது.

முன்னதாக, மதுரை செனாய் நகர் இளங்கோ மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறைகளில், கிருமி நாசினி தெளிக்கும் பணியினை, மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு