மதுரையில் பிரசவித்த தாய்மார்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கல்

மதுரையில் பிரசவித்த தாய்மார்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கல்
X

மதுரை மாநகராட்சியில் பிரசவித்த தாய்மார்க்கு தாய் சேய் நல பெட்டகத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சியில் பிரசவித்த தாய்மார்க்கு தாய் சேய் நல பெட்டகத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்.

மதுரை மாநகராட்சி மண்டலம்2 நரிமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய்மார்க்கு தாய்சேய் நலப்பெட்டகம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மருந்து பெட்டகங்களை, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆகியோர் வழங்கினார்கள்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில், உள் நோயாளிகள் மற்றும் வெளிப்புற நோயாளிகளுக்கு மருத்துவ சேவை , தாய்சேய் நலம், தொற்று நோய் தடுப்பு பணி, மக்களை தேடி மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.28 பகுதியில் நரிமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் நரிமேடு, ஜம்புராபுரம் மார்க்கெட் மற்றும் அப்பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு இம்மருத்துவ மனையின் மூலம் சிறந்த பொது மருத்துவ சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில், குழந்தை பெற்ற தாய்மார்க்கு மேயர் , ஆணையாளர் ஆகியோர் தமிழக அரசால் வழங்கப்படும் தாய் சேய் நல பெட்டகத்தை வழங்கி நலம் விசாரித்தார்கள்.

மேலும், அம்மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை செய்து வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மருந்து பெட்டகங்களையும் வழங்கினார்கள்.இந்நிகழ்வில் ,மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன் உதவி நகர் நல அலுவலர் மரு.ஸ்ரீ.கோதை, மாமன்ற உறுப்பினர் உமா, மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!