ஜல்லிக்கட்டு போட்டிக்கான நடைமுறைகள் இன்று வெளியாகும்: அமைச்சர் தகவல்

ஜல்லிக்கட்டு போட்டிக்கான நடைமுறைகள் இன்று வெளியாகும்: அமைச்சர் தகவல்
X

மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியாகும் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான உத்தரவை முதல்வர் பிறப்பித்துவிட்டார் என்றும், போட்டியை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியாகும் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்ட பின்னர், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அளித்த பேட்டியில், "ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான உத்தரவை முதல்வர் பிறப்பித்து விட்டதாகவும் , போட்டியை, எப்படி நடத்துவது என்பது குறித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியாகும் எனவும் தெரிவித்த அவர், அதனை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

Tags

Next Story
ai marketing future